Friday, June 24, 2011

முசுண்டபட்டி



பாண்டிய மன்னன் ஆண்டிட்ட பார் போற்றும்
பேரூர்....
பண்புடையோர் சேர்ந்திட்ட பசுமை போற்றும்
பேரூர்...
சுற்றி  சுழன்று காத்து நிற்கும் சுறாவளி அம்மன்
இருக்கும் எங்கள் ஊர்...
முசுண்டபட்டி....

Wednesday, June 22, 2011

முசுண்டபட்டி சுறாவளி அம்மன்.





முசுண்டபட்டி சுறாவளி அம்மன் கோவில் பூசாரி மற்றும் கரகமாடி..


முசுண்டபட்டி சுறாவளி அம்மன் கோவில் பூசாரி   மற்றும் கரகமாடி..
எங்கள் ஊரில் எல்லா திங்கட்கிழமைகளில் கோவிலில் பூஜை நடைபெறும். பூசாரி ராமு பூஜையை முன் நின்று நடத்துவார். சக்தி வாய்ந்த தெய்வம் சுறாவளி எல்லாரையும் காப்பாற்றி நல் வழி காட்டும்.
கரகமாடி வருடம் ஒரு முறை வரும் கரக படையலுக்கு கரகம் எடுத்து ஆடி வருவார். அவர் சொல்வது பலிக்கும். எட்டு பட்டி மக்களும் சுற்று வட்டார மக்களும் ஒன்று சேர்ந்து நடத்தும் இந்த திருவிழா  மிகவும் பிரசித்தி பெற்றது.
நீங்களும் ஒருமுறை வந்து சென்றால் அம்மன் நல் வழியும் வெற்றியும் தருவாள்.....

Sunday, February 27, 2011

Awards for S.Ranjani.


Our daughter S.Ranjani  got first prize for  her studies in her shcool. congrats.........

MUSUNDAPATTI KOVIL VEETTUKKU VAANGA...

This is not a simple house or building in musundapatti. This is our village  temple house( KOVIL VEEDU) in which our peole use to keep all pooja things and  they will talk all family matters and solving problems also. In our childhood, we played full time in this ground only. when any body born in musundapatti seen this photo they will defenetely remember their shool or child life. In functions, festivel and  KARAHA PADAYAL there are  no. of people in this place and pray our god Suravali amman. If any body not well  or any difficulties or personal problems, they use to come here and pray, they will get all peace, happy and plesure.  Our puusari  and karaha maadi will take care of this temple and people use to give more respect them in our village.  I can not forget and remember in my life this temple house and ground because it mixed with our blood .
R.Saravanan.

muthukku muthaaha sothukku sothaaha annan thambi piranthu vanthom...kannukku kannaaha...



I proud to introduce my brothers Mr.R. Muruganantham, Mr.R.Selvaraj, Mr.R.Baskaran who are my  god fathers, well wishers, respected friends and guide also.
I am  happy and pleasure about getting this type of brothers and pray for their long  and happy life.
R.Saravanan. Musundapatti.

Friday, February 18, 2011

MAANIDAL - மானிடள்: நகரத்தார்களும் ஆன்மீகமும்

MAANIDAL - மானிடள்: நகரத்தார்களும் ஆன்மீகமும்

OUR GOD Mangaibagar Angala Parameshwari temple Piran Malai.

































கொடுங்குன்றீஸ்வரர் கோவில், திருகொடுங்குன்றம்



தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகொடுங்குன்றம் (தற்போது பிரான்மலை என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்கொடுங்குன்றீஸ்வரர், உக்கிர கிரீசர்
இறைவி பெயர்அமுதாம்பிகை, குயிலமிர்த நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவதுஇந்த சிவஸ்தலம் பாண்டிய நாட்டில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்புத்தூரில் இருந்து 20 Km தொலைவிலும், சதுர்வேத மங்கலம் என்னும் இடத்தில் இருந்து சுமார் 8 Km தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு
கொடுங்குன்றீஸ்வரர் திருக்கோவில்
பிரான்மலை அஞ்சல்
சிவகங்கை மாவட்டம்
PIN - 624503

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோயில்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று திருக்கொடுங்குன்றம் என்றழைக்கப்படும் பிரான்மலை ஸ்ரீ கொடுங்குன்ற நாதர் ஆலயமாகும். ஒருசமயம் வாயு, ஆதிசேஷனுக்கிடையே தங்களில் யார் பலசாலி என்ற சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். ஆதிசேஷன் மேருமலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பது போட்டி. ஆதிசேஷன், மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு அதைப் பெயர்க்க முயன்றார். காற்று பலமாக வீசியதில், மேருமலையிலிருந்து சில துண்டுகள் பெயர்ந்து விழுந்தன. அவ்வாறு விழுந்த ஒரு துண்டே, இங்கே மலையாக திருக்கொடுங்குன்றம் என்ற பெயரில் உள்ளது. கடையேழு வள்ளல்களுள் ஒருவனும், முல்லைக்குத் தேர் ஈந்தவனுமான பாரி வள்ளல் ஆட்சி செய்த இடம் இப்பகுதி. அக்காலத்தில் இப்பகுதி பறம்பு நாடு என்றும் இம்மலை பறம்பு மலை என்றும் அழைக்கப்பட்டது. இன்று காலப்போக்கில் மருவி ‘பிரான்மலை' ஆகிவிட்டது.
ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான். ஆகாயப்பகுதியான உச்சியில் மங்கைபாகர் என்னும் பெயரில் ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இறைவன் உமாமகேஸ்வரர் என்றும் இறைவி தேனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள். சந்தனம், புனுகு தைலக் காப்பிட்டு, அபிஷேகம், ஆராதனை செய்து இவரை வழிபட்டால் எண்ணியது நிறைவேறும், திருமணத் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை. தென்திசையை நேராக்க வந்த அகத்திய முனிவர் தான் விரும்பும் போதெல்லாம் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழும் வரத்தைப் பெற்றார். அவ்வாறு அவர் வேண்டுதலுக்கிணங்க, இறைவன் மங்கையொரு பாகனாகக் காட்சி அளித்த பல தலங்களுள் இதுவும் ஒன்றாகும். அழகான சிற்ப வேலைப்படுகளுடன் கூடிய குடைவரைக் கோயில் இது. இங்குள்ள மங்கைபாகர் எதிரில் நந்தி இல்லை. சிவன், அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் கைலாயத்தில் இருந்தார். எனவே, சிவன் இங்கு நந்தி இல்லாமல் காட்சி தருகிறார். கொடிமரம், பலிபீடமும் கிடையாது. லிங்க வடிவம் இன்றி சிவபெருமான் மங்கைபாகர் என்ற பெயரில் உருவத் திருமேனியுடன் காணப்படும் சிலை நவ மூலிகைகளின் சாறு கொண்டு செய்யப்பட்டதாகும். எனவே, இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. பெளர்ணமியன்று புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். மங்கைபாகர் இத்தலத்தில் போக நிலையில் காட்சி தருகிறார். ஒவ்வொரு முறையும் இவருக்கு புத்தாடையையே அணிவிக்கின்றனர். ஒரேநாளில் பலமுறை வஸ்திரம் மாற்ற வேண்டி வந்தாலும், புது வஸ்திரமே அணிவிக்கப்படும். கையில் வேதங்களுடன் காட்சி தருவதால் இவருக்கு, "வேதசிவன்' என்றும் பெயருண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற, இவருக்கு வெள்ளை நிற மலர் மாலை, வஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். இந்த சன்னதியின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் காணச்சென்ற தேவர்கள், அசுரர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.
பூமிப்பகுதியில் மிக முக்கியமான சன்னதியாய் விளங்குவது பைரவர் சன்னதியாகும். இங்குள்ள பைரவர் வடுக பைரவராய் எழுந்தருளியிருக்கிறார். வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது. கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் எனத் திகழ்கின்றது பைரவர் கோயில். தெற்கு நோக்கிய சன்னதி. பைரவர் சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றார். நின்ற திருக்கோலம். சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. பண்டை அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமாக வாள் சார்த்தி வைக்கப்பட்டுள்ளதாம். பைரவருக்கு வலப்புறம் உள்ள சன்னதியில் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி எழுந்தருளியுள்ளனர். வடுக பைரவர் தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி சன்னதிகளும் உள்ளன.
முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப்படுத்தினான். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவர் ஆகும். ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் களைபவர் இத் தலத்து பைரவர். கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து இவரிடம் வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அடுத்து கீழே உள்ள பகுதியில் கிழக்குப் பார்த்து கொடுங்குன்ற நாதர் உக்ரகிரீஸ்வரராக எழுந்தருளியிருக்கின்றார். அம்பாள் தேனிற் பொலிமொழியாள் என்றும் அமிர்தேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறாள். நின்ற திருக்கோலம். அபய ஹஸ்தம். மேற்குப் பார்த்த தனிக் கோயிலில் வள்ளி தெய்வயானை உடனிருக்க சுப்பிரமணியர் யானை வாகனத்தில் காட்சி அளிக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் இரு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்தின் தலவிருட்சம் உறங்காப்புளி மரம் என்றும் பெயரில்லா மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுகாறும் இம்மரத்தை என்ன பெயர், எந்த வகையைச் சார்ந்தது என்பதை யாராலும் அறிந்து கொள்ளமுடியாததால் இதனை 'பெயரில்லா மரம்' என்று அழைக்கின்றனர். தீர்த்தம் தேனாழி தீர்த்தம். மகோதர மகரிஷி, ஆதிசேஷன், பிரம்மா, சரஸ்வதி, சுப்ரமண்யர், நந்தி ஆகியோர் வந்து வழிபட்டு அருள் பெற்றிருக்கின்றனர்.
மலையடிவாரத்தில் கோயிலின் நுழைவாயில் முன்புறம் அடையவளைந்தான் என்ற பெயர் கொண்ட திருக்குளம் உள்ளது. அதனை அடுத்துள்ள ராஜா மண்டபத்தைக் கடந்து, விநாயகரை வழிபட்டுப்பின் உச்சிக் கோயில், இடைக்கோயில், அடுத்து அடிவாரக் கோயில் என வழிபட வேண்டும் என்பது மரபாக இருக்கிறது. சித்திரை மாதத்தில் பெருவிழாவும், தை மாதத்தில் பைரவருக்கு சிறப்பு விழாவும் நடைபெறுகின்றது.
ஏறுவதற்கு மிகவும் கடினமானது என்பதாலும், கொடிய பல வளைவுகளைக் கொண்டிருப்பதாலும் இது கொடுங்குன்றம் என்றழைக்கப்படுகின்றது. அடிவாரத்தில் இருந்து மலையுச்சிக்கு சுமார் ஐந்து கி.மீ. நடக்க வேண்டும். செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருக்கிறது. சில இடங்களில் படிக்கட்டுகள் இல்லை. சித்தர்கள் பலர் இன்னமும் சூட்சும வடிவில் இந்த மலையில் வாழ்வதாக நம்பப்படுகிறது. மலையுச்சியில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு இஸ்லாமியப் பெரியவரின் சமாதியும் (தர்கா) உள்ளது. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் செய்த பாவங்கள் நீங்க, மூன்றடுக்குள்ள சிவாலயமான பிரான்மலை மங்கைபாகர் கோயிலை தரிசனம் செய்து பேறு பெறுவோம்.

Tuesday, February 15, 2011

She is not only mother but beyond that......................

We are proud and happy to introduce our mother Mrs.Jothi mani Ramasamy who has taken all efforts, dedication,hard work and sacrifice for our family and our village also. If you ask any body in our village they will tell about our mother. She use to help  every body through  giving adivice, food and some times  chitha  mediacal treatment also.
We developed and came this status becasue of her contribution and our father only.  We pray our God for her long  and peace life.

M.Ramasamy chettiar- Jothimani achi family:  PER SOLLUM PILLAIHAL

SONS & daughter in laws:
R.Muruganantham-M,Santhi, R.Selvaraj-S.Selvi, R.Baskaran-B.Vijayalakshmi, R.Saravanan-S.Alageswari.

Daughters & Son in laws:
M.Sethuraman-S.Vijayalakhmi, M.Subbaiah(late)-S.Dhanalakshmi,V.Murugaiah- M.Muthulakshmi.

Grand sons &  Daughters:
M.Sankar Ram, S.Vidhya, M.Malathi, S.Venkat Ram, B.Ramya, B.Jothiha, S.Ranjani,B.Priyanga & S. Harini.
S.Ramesh- Panimalar- Dharshini, Murugantham- M.Anusuya-M. Archana-M.Karthik,  S.Suresh- S.Kayal vizhi- S.Santhosh balan,
S. Manikandan, Senthil-S.Sathya-S. Matheeshvar,   M.Priya, S.Balaji, M.Venugopal, M. Rathnam.

THODARATTUM   INTHA    URAVUHAL         THALAIMURAI THAANDI.....................

Wednesday, February 2, 2011

Lord Muruga. continues journey to palani from musundapatti




Our people from musndapatti use to go palani for praying Lord MURUGA  for  peace and health.  I am seeing this journey from my child hood. Even they could have started this habbit 40 to 50 years onwards. you can also join this journey  get all type of health, peace, pleasure and success.