Friday, December 14, 2012
Tuesday, December 11, 2012
Monday, December 10, 2012
musundapatti appachi family....
R.Muruganantham - M.Santhi, Vellore. S/O. M. Ramasamy - R. Jothimani.Musundapatti, Sivaganga Dt.
எங்கள் பெரிய அண்ணன் ராம. முருகானந்தம் அண்ணி மு. சாந்தி...
இறை அருள் தரு பொருளாய்
ஏற்றிடும் கருப் பொருளாய்
மறை பொருள் ஒரு பொருளாய்
மணந்திடும் மலர்ப் பொருளாய்
விளை தரு வெண்மணியாய்
விளங்கிடும் வெண்ணிலவாய்
மழை தரு மூலவராய்
மலர்ந்திடும் வேலவராய்
அண்ணா....
சந்தங்கள் சேர்ந்து வரும்
சரணங்கள் சார்ந்து வரும்
பந்தங்கள் தேடி வரும்
பாசங்கள் கோடி வரும்
சாந்தமுடன் என்றும்
சந்ததிகள் சொல்லி வரும்
பாந்தமுடன் என்றும்
பரம்பரை ஆகிவரும்
அண்ணி....
வாழ்த்துகிறோம் நாங்கள்
வையம் போற்றிடவே ...
வணங்குகிறோம் இறையை
வாழ்க வளமுடன்...
வள்ளி மணாளனும்
அள்ளி கொடுக்கட்டும்
அள்ளி தரும் மனசும்
ஆறாய் பெருகட்டும்...
உங்களோடு ...
உங்களுக்காக...
உங்களின்....
உடன் பிறப்புக்கள்....
மயி. சேதுராமன் விஜய லக்ஷ்மி
சுப. தன லக்ஷ்மி
ராம. செல்வராஜ் செல்வி
வே. முருகையா முத்து லக்ஷ்மி
ராம. பாஸ்கரன் விஜய லக்ஷ்மி
ராம . சரவணன் அழகேஸ்வரி
Thursday, December 6, 2012
மானவசெல்வங்களே .....
கல்வி மட்டுமே நம்மை கரை சேர்க்கும்... படியுங்கள்... கடுமையாக உழையுங்கள்.. அதுவும் நீங்கள் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்திருந்தால் இன்னும் உழைக்க வேண்டும்.
சினிமாவும், காதலும் ,மதுவும் நம்மை அடிமை படுத்துபவை..
உங்கள் லட்சியம் எல்லாம் படிப்பில் இருக்கட்டும்.. ஆடுபவர்கள் எல்லாம் ஆடட்டும்.. காலம் முடிந்த பின்னர் திரும்பி பார்க்க ஒரு நாதி இருக்காது.
பஸ்ஸில் தொங்குவதர்க்கோ, சாலையில் வண்டியில் பறப்பதர்க்கோ யாரும் பரிசு கொடுப்பதில்லை.. மாறாக தீராத பாவத்தை உங்கள் குடும்பத்திற்கு கொடுத்து விடாதீர்கள்.
நிறைய பேர் ஜாலியாக இருக்கும் வயது என்பார்கள். அந்த நாய்கள் உங்களை திரும்பி கூட பார்க்காது.
உங்கள் கல்வி உங்களை மட்டும் உயர்த்த போவதில்லை...உங்கள் சொந்தம் நட்பு எல்லோருக்கும் கை கொடுக்கும்.
உங்கள் கல்வி உங்களை உயர்த்தும், உங்கள் கிராமத்தை உயர்த்தும்.. நம்பிக்கை நட்சத்திரமாக உயர்வீர்கள்....
வாழ்த்துக்கள்.......
Subscribe to:
Posts (Atom)
















